ஆளுனர் உரைக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு

ஆளுனர் உரைக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு
X

காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற தலைவர் செல்வபெருந்தகை.

தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரைக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஆளுனர் உரைக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு: காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற தலைவர் செல்வபெருந்தகை பேட்டி:

இந்த அரசின் ஆளுனர் உரை வரலாற்று சிறப்பு மிக்கது. அரசின் பல்நோக்கு திட்டங்களை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கின்ற ஆளுனர் உரை. முதல்வர் பதவி ஏற்று இரண்டு மாதங்கள் முடிவடைவதற்குள் என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தார்களோ அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வகையில் ஆளுநர் உரை அமைந்திருக்கிறது.

குறிப்பாக வேளாண்மை திட்டங்களுக்கு தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். இது வரவேற்கத் தகுந்தது. நீண்ட நாள் கோரிக்கை வேளாண்மைக்கு தனியாக வரவு செலவு செய்ய வேண்டும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற அது இன்றைய ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கிறது. வேளாண்மை, விவசாயம் தான் இந்த நாட்டினுடைய முதுகெலும்பு என்று மகாத்மா காந்தியடிகள் சொல்லியிருக்கிறார். அந்த அடிப்படையில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை இதுதான் வரலாற்று சிறப்புமிக்க செய்தியாக இருக்கிறது.

அதே போன்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் அவர் பதவியேற்று ஒரு மாதத்திற்குள்ளாக 68 மனுக்களை பெற்று அதற்கு தீர்வு காண செய்துள்ளார்கள். மெட்ரோ ரயில் ஆகட்டும் திருநெல்வேலி,மதுரை, திருச்சி போன்ற இடங்களில் விரிவாக்கம் செய்வது, இதேபோன்று சென்னையில் இரண்டாம் கட்டமாக நடைபெறுகின்ற மெட்ரோ ரயில் நிலையத்தை வெகுவாக அதை துரிதப்படுத்துவது.

அதே போல் கொரானா காலங்களில் இந்தப் பேரிடரில் எப்படி செயல்பட்டார்கள் என்று ஆளுநர் உரை எடுத்துரைக்கிறது. கொரானா நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு ஒரு குடும்ப அட்டைக்கு தருகின்றோம் என அதை தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், அந்த தொகை உடனே தருகிறோம் என்று சொல்லவில்லை.

ஆனால் மே மாதத்திலும், ஜூன் மாதத்திலும் அதை கொடுத்து முடித்து விடுவோம் என்ற ஒரு அறிவிப்பு அற்புதமான அறிவிப்பு. 14 வகை பொருட்கள் கடந்த காலங்களில் முழு அடைப்பு செய்யும் பொழுது மக்கள் எல்லாம் கூறியது என்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பசியும் பட்டினியால் சாவதை விட கொரானாவால் சாகின்றோம் என்ற குரல் ஒலித்தது. ஆனால் இந்த அரசு பொறுப்பேற்று ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் கடந்த மாதம் இரண்டாயிரம் ரூபாய் இந்த மாதம் இரண்டாயிரம், 14 வகையான மளிகை பொருட்களும் 5 கிலோ அதிகப்படியான அரிசியும் கொடுத்திருக்கிறார்கள்.

இப்படி ஏறக்குறைய ஆயிரம் கோடிக்கு மேல் இதற்காக செலவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு அம்சங்களும் பாராட்டுக்குரியது ஆகவே இந்த ஆளுநர் உரை வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுநர் உரை என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!