பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர் விடுமுறையா?

பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர் விடுமுறையா?
X

பள்ளிக்கல்வித் துறை (கோப்பு படம்)

வரும் மார்ச் 8 திங்கள் கிழமையுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைகிறது.

பிளாஸ்2 விடைத்தாள் திருத்தும் பணியும் நிறைவடைகிறது. மற்ற வகுப்புகளுக்கானத் தேர்வுகள் 5 ஆம் தேதியுடன் முடிந்து, 10 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் 22 மற்றும் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர தேவையில்லை. 9 ஆம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பு விடுமுறை. 10, 11 ஆம் தேதிகளில் புனித ரமலான் பண்டிகை விடுமுறை. 13, 14 சனி ஞாயிறு வார விடுமுறை. தொடர்ந்து 16 ஆம் தேதி, தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. 18 வியாழன், 19 வெள்ளி ஆகிய தினங்களில் தேர்தல் பணிகளுக்காக ஆசிரியர்கள் செல்ல வேண்டி உள்ளது. +1 விடைத்தாள் திருத்தும் பணி 22 ஆம் தேதி அன்று ஆரம்பமாகிறது.

வருகிற 09.04.24 செவ்வாய்க்கிழமை முதல் 21.04.24 ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் விடுமுறை விடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல் கசிந்துள்ளது.

22.04.24 திங்கட்கிழமை முதல் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணியும், மற்ற வகுப்புகளுக்கு தேர்ச்சித் தொடர்பான பணிகளும் நடைபெறும். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!