டிஎன்பிஎஸ்சி செயலாளராக கோபாலசுந்தரராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம்

டிஎன்பிஎஸ்சி செயலாளராக கோபாலசுந்தரராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம்
X

டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கோபாலசுந்தர ராஜ் ஐஏஎஸ்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக கோபாலசுந்தரராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசு துறைக்கு தேவையான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவர் வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் உமா மகேஸ்வரி ஐஏஎஸ்க்கு பதிலாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக யாரும் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நியமனத்தில் தமிழக அரசுக்கும் தமிழ்நாடு ஆளுநருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் நியமிக்கப்படாமல் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய செயலாளராக ச. கோபால் சுந்தரராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் செயலாளர்(பொறுப்பு) அஜய் யாதவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய செயலாராக குடிமைப் பணி அலுவலர் ச.கோபால சுந்தரராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!