காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு ரூ. 5 கோடி மதிப்பிலான தங்கக்கவசம்
பக்தரால் நன்கொடையாக வழங்கப்பட்ட தங்க கவசத்தை அணிவித்து, சிறப்பு பூஜை செய்த காஞ்சி சங்கராச்சார்யார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் வெளி மாநில மாவட்ட பக்தர்கள் ஏராளமாக வந்து தரிசனம் செய்வதும், நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் ஆந்திர மாநில பக்தர் ஒருவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு கீரீடம் முதல் பாதம் வரை வைரம்,வைடூரியம் மற்றும் நவரத்தினக்கற்கள் பதித்த ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக்கவசத்தை, இன்று சமர்ப்பித்தார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து, மாலை 5 காமாட்சி அம்மன் கோயிலுக்கு மங்கள மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலம், காஞ்சி காமகோட பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது. ஊர்வலம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஸ்ரீவிஜயேந்திரரால் நடத்தப்பட்டு அவரது திருக்கரங்களாலேயே அம்மனுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது.
இக்கவசம் அணிவிப்பதை ஒட்டி, கோயிலில் கும்பகோணம் தினகரன் சர்மா அவர்களால் 60 பொருட்கள் கொண்டு ஷூக்த ஜெபம் மற்றும் ஹோமங்கள் நேற்று மாலையில் தொடங்கி திங்கள்கிழமை மதியம் வரை நடைபெறுகிறது. இந்த வாரம் முழுவதும் தங்க கவசம் பக்தர்கள் பார்வைக்காக அம்மனுக்கு சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu