மயான பணியாளர்களும் இனி முன்களப் பணியாளர்களே - தமிழக அரசு அரசாணை

மயான பணியாளர்களும் இனி முன்களப் பணியாளர்களே - தமிழக அரசு அரசாணை
X

முதல்வர் மு.க. ஸ்டாலின்.

மயானங்களில் பணிபுரிவோரை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பெருந்தொற்று காலத்தில் காவல்துறையினர், முப்படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர், சிறைச்சாலை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மையில் ஈடுபடும் தன்னார்வலர்கள், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பணியாற்றும் நகராட்சி அல்லது வருவாய்த்துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் ஏற்கனவே முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வரும் மயான பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும், அவர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மயானப் பணியாளர்கள் இறக்க நேரிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்