அம்மா உணவகங்களில் உணவு இலவசம்: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்

அம்மா உணவகங்களில் உணவு இலவசம்: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்
X
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 
மழை முடியும் வரை, அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில், மழை முடியும் வரை, அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், மழைக்காலம் முடியும் வரை, சென்னையில் அம்மா உணவகங்கள் மற்றும், மாநகராட்சி சமையல் கூடங்களில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் திட்ட பணிக்காக விளம்பரம் செய்யப்பட்டு, அதற்கான தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய முதல்வர், மழை நீர் கால்வாய்களை தூர்வாரும் பணிக்கு கடந்த மழைக்காலத்தில் 5ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள போதிலும் அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்களில் மழைநீர் கால்வாய்கள் சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 771 கிலோ மீட்டருக்கான அளவில், ஆகாய தாமரை மற்றும் கழிவுகள் தூர்வாரப்பட்டுள்ளதல் ஓரளவிற்கு சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுகளில், 10 முதல் 15 நாட்கள் மழை நீர் தேங்கியிருக்கும் என்றும் இம்முறை உடனடியாக வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil