அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி
பைல் படம்
தமிழக அரசின் சென்னை , அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள், கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு, 20:06.2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்விற்கு கட்டணமில்லாப் பயிற்சியினை அளிக்க உள்ளது.
சென்னை , அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி, உணவு, தரமான நூலகம், காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது. இப்பயிற்சி மையம் 225 முழுநேரத் தேர்வர்களை யும், 100 பகுதிநேரத் தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதே போன்று, அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள், கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தலா 100 முழுநேரத் தேர்வர்களை முதல்நிலை தேர்வு பயிற்சிக்காக அனுமதிக்கின்றன.
அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான (IAS.JPS.,etc) 2023 -ஆம் ஆண்டு முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி தமிழகத் தைச் சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள். முதுநிலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையிலுள்ள அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி பயிற்சி மையங்களிலும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லாப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சிக்கான விண்ணப்பதாரர்களிடமிருந்து நுழைவுத் தேர்விற்கு இணையதள வழியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு. 7077 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
2023-ஆம் ஆண்டில் மத்தியக் தேர்வாணையக்குழு (UPSC) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதாம் - civiteervicecoaching.com வாயிலாக 07:10 2022 முதல் 27.10.2022 வரை விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
மேலும், விண்ணப்பிக்கும்பட்சத்தில் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது.மேலும், பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் தகுதியுடைய நபர்கள் 13.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த ஆர்வலர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பயிற்சி மைய இணையதளத்தின் www.civilservicecoaching.com வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வில் 150 கொள்குறி வினாக்களுக்கு விடையளிக்கப்பட வேண்டும். தேர்வு 13.11.2022 அன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை இரண்டரை மணி நேரம் நடைபெறும். பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில். தேர்வு மையங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவ்வப்போது அறிவிக்கப்படும் விவரங்களை www.cvilservicecoaching.com என்ற இணைய தளத்திலும், தொலைபேசி எண் 044 – 24621475, அலைபேசி எண் 9444286657 ஆகிய எண்களையும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu