முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது
X

former minister arrested-முன்னாள் அமைச்சர் உதயகுமார் 

Union Minister Arrested -மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது செய்யப்பட்டார்.

Union Minister Arrested -முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஆர்.பி.உதயகுமார். அவர் இன்று மதுரை கப்பலூரில்,உள்ள சுங்கச்சாவடியை அகற்றவேண்டும் என்று கூறி உண்ணாவிரதம் இருந்ததாக தெரிகிறது. போலீசார் அவரை அப்புறப்படுத்த முயன்றனர்.ஆனால் அவர் செல்ல மறுத்ததால், போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கப்பலூர் சுங்கச் சாவடி

மதுரை,கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றக்கோரி மத்திய,மாநில அரசுகளை அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

ஒருபக்கம் மக்கள் போராடி வரும் நிலையில் சுங்கச்சாவடியை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், கட்டண விலக்கு அளிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு வக்கீல்கள் மூலமாக கட்டணத்தை செலுத்த வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இது அப்பகுதி மக்களையும்,வாகன உரிமையாளர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

இது குறித்து அதிமுக தரப்பில் கூறும்போது , சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னால் தேர்தல் வாக்குறுதியில் திமுக சார்பில் கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை வலியுறுத்தியே இன்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உண்ணாவிரதம் இருந்தார் என்று அதிமுக தரப்பினர் கூறினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!