அதிமுக முன்னாள் அமைச்சர் பெங்களூருவில் திடீர் கைது

அதிமுக முன்னாள் அமைச்சர் பெங்களூருவில் திடீர்  கைது
X

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினியுடன்.

துணை நடிகை பாலியல் புகார் அடிப்படையில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சாந்தினி என்ற துணை நடிகையுடன் தொடர்பில் இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. அந்த நடிகை அவர்மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக அவரை போலீசார் தேடி வந்தனர். தலை மறைவாக இருந்த அவரை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர்.

துணை நடிகை சாந்தினியை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவருடன் குடும்பம் நடத்தியதில் அவர் கர்ப்பமானார். அவரை கட்டாயப்படுத்தி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கருக்கலைப்பு செய்ததாக நடிகை புகார் தெரிவித்து இருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மீது 6பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரை பிடிப்பதற்கு 2தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.அவரது முன்ஜாமீன் மனுவையும் சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில் அவர் தலைமறைவானார். பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!