"பாலியல் மெசேஜ், மிரட்டல்" ஆசிரியர் மீது 5 மாணவிகள் தேனி கலெக்டரிடம் புகார்

பாலியல் மெசேஜ், மிரட்டல் ஆசிரியர் மீது 5 மாணவிகள் தேனி கலெக்டரிடம் புகார்
X

கோப்பு படம்

அந்த படங்களை அனுப்பிய பழைய ஆசிரியர் 'நான் தான் மீண்டும் வருவேன், உங்களை என்ன செய்கிறேன் பார்' என மிரட்டுகிறார் -மாணவிகள்

தங்களது கணிதம் வகுப்பு ஆசிரியர் மொபைலில் ஆபாச படங்கள், எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி தொல்லை தருவதாக ஐந்து மாணவிகள் கலெக்டர் முரளீதரனிடம் புகார் செய்தனர்.

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணிதம் பாடப்பிரிவினை சேர்ந்த ஐந்து மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து கலெக்டர் முரளீதரனை சந்தித்தனர். அப்போது மாணவிகள் தங்களது மொபைல் போன்களை கலெக்டரிடம் காட்டி, 'அதில் இருந்த படங்களை பாருங்கள்' சார் என்றனர்.

அரைகுறை ஆடையில் ஒரு ஆசிரியர் குளிப்பது, படுக்கையில் படுத்து கிடப்பது போன்ற படங்கள் அதிகளவில் இருந்தன. தவிர அவர் அனுப்பிய ஆபாச எஸ்.எம்.எஸ் களை கலெக்டரிடம் நேரடியாக காண்பித்தனர். இந்த படங்களை அந்த ஆசிரியர் அனுப்பி மூன்று மாதங்கள் ஆகிறது. இது குறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் செய்தோம். ஆனால் அவரை தேவாரம் பள்ளிக்கு மாற்றி விட்டனர். வேறு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. வேறு கணித ஆசிரியர் நியமிக்கப்படாததால் எங்களுக்கு கணிதப்பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை. ஆனால் அந்த படங்களை அனுப்பிய பழைய ஆசிரியர் 'நான் தான் மீண்டும் வருவேன், உங்களை என்ன செய்கிறேன் பார்' என மிரட்டுகிறார் எனக்கூறினர்.

கலெக்டர் தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரேவை தொடர்பு கொண்டு இந்த புகார் சம்மந்தமாக விரிவான விசாரணை நடத்தி, குற்றம் உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தார். பின்னர் அந்த மாணவிகள் இந்த புகார் சம்மந்தமாக எஸ்.பி.,யை சந்தித்து முறையிட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்