பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
X

தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நேற்று பத்திரிகையாளர் நல வாரியக் கூட்டம் நடைபெற்றது.

  • Financial Assistance -பணியின்போது உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

Financial Assistance -சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூட்டரங்கில் தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நேற்று பத்திரிகையாளர் நல வாரியக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பத்திரிகையாளர் நல வாரியத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், பத்திரிகையாளர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் மற்றும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டன.

முன்னதாக, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ், பணியில் இருக்கும்போது இயற்கை எய்திய பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து எஸ். லதா, க/பெ. திரு. பி.சுந்தரவடிவேல் (லேட்), ரா.வனிதா, க/பெ. சு.ராமகிருஷ்ண ன்(லேட்), ரா.சுஜாதா, க/பெ. திரு.கே.ராஜேந்திரகுமார்(லேட்) ஆகியோருக்கு தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினைசெய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

இக்கூட்டத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் இயக்குநர் (செய்தி) வ.சு. சரவணன், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) மு.பா.அன்புச்சோழன், பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களான தினத்தந்தி குழுமத்தின் இயக்குநர் சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன், தி இந்து நாளிதழ் துணை ஆசிரியர் பி.கோலப்பன், தி வீக் வார இதழின் முதன்மை சிறப்புச் செய்தியாளர் லெட்சுமி சுப்பிரமணியன்,தீக்கதிர் நாளிதழின் செய்தியாளர் எஸ்.கவாஸ்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சிறப்புச் செய்தியாளர் எம்.ரமேஷ், அலுவல்சார் உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ், பணியில் இருக்கும்போது இயற்கை எய்திய பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

நிதி உதவி பெறவுள்ள பயனாளர்களின் விவரங்கள்:


வரிசை எண்.

விண்ண ப்பதாரர் பெயர்/ பத்திரிகையாளர் பற்றிய விவரம்

விலாசம்

பணிபுரிந்த ஆண்டுகள்

தகுதி பெறும் குடும்ப உதவி நிதி

1

ம.நாகஜோதி க/பெ.ம.சண்முக சுந்தரம், நிருபர், காலைக்கதிர்

எண்.304, பெரியார் நகர் வடக்கு காந்திகிராமம், கரூர் -639 004

16 ஆண்டுகள்

ரூ.2.25 இலட்சம்

2

எஸ்.ஆர்த்திஸ்வரி க/பெ.சு.விமல்ராஜ், மாவட்ட செய்தியாளர், டாக்டர் நமது எம்.ஜி.ஆர்

765, மின்நகர், 1வது தெரு, வேங்கிக்கால், திருவண்ணாமலை 606 604

20 ஆண்டுகள்

ரூ.3 இலட்சம்

3

ஜெயமெரி க/பெ.ப.சீனிவாசன், நிருபர், தினகரன்

2/175, புது வாய்க்கால் தெரு, கோட்டூர் தோட்டம், திருவாரூர் 614 708

24 ஆண்டுகள்

ரூ.2 இலட்சம்

4

அ.நிர்மலா க/பெ.அ.அருள்குமார், நிருபர், நக்கீரன்

54E, பனைமரத்தூர் மெயின்ரோடு, தெலுங்குப்பாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் 641039

20 ஆண்டுகள்

ரூ.5 இலட்சம்

5

செ.நாகராணி க/பெ.ம.செல்வம், செய்தியாளர், தினக்குரல்

எண்.B51/2, DRO காலணி, கே.புதூர், மதுரை 625 007

13 ஆண்டுகள்

ரூ.2.50 இலட்சம்

6

ரா.முருகேஸ்வரி க/பெ.பெ.ராஜன், செய்தியாளர், டாக்டர் நமது எம்.ஜி.ஆர் (ம) ஈவ்னிங் தமிழ்நாடு

எண்.7, சத்தியசாய் நகர், 1வது தெரு, இரும்புலியூர், தாம்பரம், சென்னை 600 045

22 ஆண்டுகள்

ரூ.3 இலட்சம்

7

ஜெ.சுதா க/பெ.அ.அழகு சுந்தரம், புகைப்படக்காரர், மாலைமலர்

எண்.314-8, பிளாட் எண்.9, ராம் நகர், இச்சிகாமாலைப்பட்டி, குமாரமங்கலம், புதுக்கோட்டை 622 515

28 ஆண்டுகள்

ரூ.2 இலட்சம்

8

பழனியம்மாள் க/பெ.மா.பவுன்ராசா, செய்தியாளர், விடுதலை

அய்யனார்குளம் அஞ்சல், உசிலம்பட்டி வட்டம், மதுரை 625 537

20 ஆண்டுகள்

ரூ.3 இலட்சம்




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!