5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: அக்டோபர் 10 நடைபெறும் என தகவல்.
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள டெங்கு சிறப்பு பிரிவை பார்வையிட்ட அமைச்சர்
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள டெங்கு சிறப்பு பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து டெங்குவின் தாக்கம் தலைதூக்கத் தொடங்கி உள்ளது. அனைத்து துறைகளிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிவித்து இருக்கிறோம். அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு உடல் வெப்ப நிலை சோதனை மூலம் காய்ச்சல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மெகா தடுப்பூசி முகாம்களை கடந்த வாரம் முதலமைச்சரே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
75% மக்கள் முதல் தவனை தடுப்பூசி செலுத்திக்கொண்டாலே கொரோனா பரவல் பாதிப்பை குறைக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 33 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்றும் 15 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 64% முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 25% பேர் 2-வது தவனை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 30 ஆயிரம் சிறப்பு முகாம் மூலம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu