/* */

சிவகாசி வங்கியில் ரூ.7.5 கோடி மோசடி..!

சிவகாசியில் போலி நகையை அடமானம் வைத்து ரூ.7.5 கோடி மோசடி நடந்துள்ளது.

HIGHLIGHTS

சிவகாசி வங்கியில் ரூ.7.5 கோடி மோசடி..!
X

தங்க நகைகள் (கோப்பு படம்)

சிவகாசியில் உள்ள பொதுத்துறை வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளர் ரஞ்சித்(45). இவரது நிர்வாகத்தின் கீழ் திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் 46 கிளைகள் இயங்கி வருகின்றன.

ரஞ்சித் கடந்த 2 நாட்களாக சிவகாசி கிளையில் தணிக்கை மேற்கொண்டார். அதில் பல நகைக்கடன் கணக்குகள் நீண்ட காலமாக திருப்பப்படாமல் இருந்துள்ளன. அந்த கணக்குகளில் உள்ள நகைகளை ஆய்வு செய்த போது, அவை போலியான நகைகள் என்பது தெரியவந்தது. வங்கி வாடிக்கையாளரான நகைக் கடை உரிமையாளர் பாலசுந்தரம் என்பவர் தனக்கு தெரிந்த 56 பேர் மூலம் 126 கணக்குகளை தொடங்கி நகை மதிப்பீட்டாளர் முத்துமணி உதவியுடன் 15,427 கிராம் போலி நகைகளை அடகு வைத்து, ரூ.7,55,56,509 நகைக்கடன் பெற்றது தெரிய வந்தது.

இதுகுறித்து மேலாளர் ரஞ்சித் அளித்த புகாரில் நகை கடை உரிமையாளர் பாலசுந்தரம், நகை மதிப்பீட்டாளர் முத்துமணி ஆகியோர் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சிவகாசி டிஎஸ்பி தனஞ்ஜெயன் தலைமையிலான போலீசார் பாலசுந்தரம், முத்துமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 March 2024 6:01 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  3. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  4. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  5. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  7. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  8. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  9. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  10. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!