பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை நீடிப்பு!
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை நீடிப்பு; கோர்ட் உத்தரவு ( மாதிரி படம்)
பள்ளிக்கல்வித்துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது, 50 சதவீத இடங்களை நேரடியாகவும், 48 சதவீத இடங்களை இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், எஞ்சிய 2 சதவீத இடங்களை தகுதி பெற்ற அமைச்சு பணியாளர்கள் வாயிலாகவும் நிரப்ப வேண்டும் என, 2007ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையின்படி, 2011 வரை தகுதி பெற்ற அமைச்சு பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. பின், அமைச்சு பணியாளர்களுக்கு அந்த ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி, பரணி என்பவர் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு தராமல், பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்தது.
2014-15ம் ஆண்டு முதல் 2024-25ம் ஆண்டு வரை அமைச்சுப் பணியாளருக்கு 2% ஒதுக்கீட்டின் கீழ் 130 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் உள்ளது. இந்தநிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu