துாத்துக்குடியில் இருந்து சென்னை..! தமிழகத்தின் முதல் விரைவுச்சாலை..!
சென்னை- துாத்துக்குடி எக்ஸ்பிரஸ் வே குறித்த வரைபடம்.
பாரத் மாலா திட்டத்தின் 2ம் கட்டத்தின் கீழ் இந்த மிகப்பெரிய சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னை - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்வே மொத்தமாக 606 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை திண்டிவனம், விழுப்புரம், உளுந்துப்பேட்டை, விருத்தாசலம், அரியலூர், செங்கிப்பட்டி[தஞ்சாவூர்], புதுக்கோட்டை, பிள்ளையார்பட்டி இடையே அமைக்கப்பட உள்ளது.
வழி சாலையாக இந்த சாலை அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சென்னை டூ தூத்துக்குடி துறை முகத்தை இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்படலாம். இதனால் பயண நேரம் 9 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறையலாம் என்று கூறப்படுகிறது.
தஞ்சாவூர் to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இச்சாலை நடுவில் அமைவதால் தஞ்சையிலிருந்து சென்னை மற்றும் மதுரை,தூத்துக்குடி செல்லும் நேரம் குறையும்.
மேலும் செங்கிப்பட்டியில் சிப்காட்தொழிற்பூங்கா அமைவதால் எளிதில் சரக்குகள் தூத்துக்குடி துறைமுகத்தை சென்றடையும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தத்தில் இந்த எக்ஸ்பிரஸ்வே தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அளவில் உதவி புரியும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu