நாமக்கல் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு - பொதுமக்கள் பீதி

நாமக்கல் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு - பொதுமக்கள் பீதி
X

சித்தரிப்பு காட்சி 

நாமக்கல் மாவட்டத்தில் பெரும் வெடிச்சத்தத்துடன் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்கள் பீதியைடந்தனர்.

நாமக்கல், மோகனூர், ப.வேலூர், இராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில், இன்று காலை 11 மணியளவில் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. தொடர்ந்து லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

இதனால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள், சூப்பர் மார்கெட்டுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கண்ணாடி ஜன்னல்கள் படபடத்தன. வீடுகளில் கடும் அதிர்வு ஏற்பட்டதால் கதவுகள் அதிர்ந்தன. நில அதிர்வை கண்டு அச்சமடைந்த பொதுமக்கள், வீடுகளை வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். பலரும் பெரும் பீதியடைந்தனர்.

இந்தோனேஷியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உணரப்பட்டது நிலநடுக்கமா அல்லது ஏதாவது பெரிய வெடிப்பு சம்பவமா என்பது இதுவரை தெரியவில்லை.

Tags

Next Story
the future of ai in healthcare