கொடுமுடி எழுத்தாளருக்கு 'தூய தமிழ் பற்றாளர்' விருது

கொடுமுடி எழுத்தாளருக்கு தூய தமிழ் பற்றாளர் விருது
X
இளம் எழுத்தாளர் யசோதா நல்லாள், 2024 ஆம் ஆண்டுக்கான 'தூய தமிழ் பற்றாளர்' விருதைப் பெற்றுள்ளார்.

கொடுமுடி எழுத்தாளருக்கு 'தூய தமிழ் பற்றாளர்' விருது

ஈரோடு: கொடுமுடி, வடக்கு புதுப்பாளையத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் யசோதா நல்லாள் (37) குறிப்பிடத்தக்க இலக்கியப் பங்களிப்புக்காக 2024 ஆம் ஆண்டுக்கான 'தூய தமிழ் பற்றாளர்' விருதைப் பெற்றுள்ளார்.

வ.கோ.சுப்பிரமணியத்தின் மகளான யசோதா நல்லாள், 'சங்க இலக்கியத்தில் கண்கள்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு, கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறையில் கவுரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற விழாவில், செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கு விருதையும் ₹20,000 ரொக்கப்பரிசையும் வழங்கினார்.

விருது பெற்ற யசோதா நல்லாள், "ஈரோடு மாவட்டத்திலிருந்து விருதுக்கு விண்ணப்பித்தேன். என் தமிழ் அறிவும், சான்றிதழ்களும் மதிப்பீட்டில் தேர்வு செய்யப்பட்டு, இப்பெருமை கிடைத்தது," என மகிழ்ச்சி தெரிவித்தார்.

Tags

Next Story