ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் மகளிர் தின விழா

ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் மகளிர் தின விழா
X
பவானி எம்.எல்.ஏ. தலைமையில் ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் மகளிர் தின விழா, பரதநாட்டியம், கரகாட்டம் மற்றும் மற்ற ஆச்சரியமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் மகளிர் தின விழா மற்றும் கலைவிழா

ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஒத்தகுதிரையில் அமைந்துள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் மகளிர் தின விழா மற்றும் கல்லூரி கலைவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பவானி சட்டமன்ற உறுப்பினரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் செயலாளருமான திரு. கருப்பணன் அவர்கள் தலைமை வகித்தார். பிரபல திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரிமியா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளை வழங்கி அனைவரையும் மகிழ்வித்தனர். கம்பத்தாட்டம், சலங்கையாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம், கம்பு சுற்றுதல், கதகளி, மோகினி ஆட்டம் போன்ற பாரம்பரிய கலை வடிவங்களுடன், ராணுவத்தைப் போற்றும் வகையில் சிறப்பு நடனம் மற்றும் மேற்கத்திய நடன நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. மாணவர்களின் திறமையான கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் மனதை கவர்ந்தது. விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவர் வெங்கடாசலம், இணை செயலாளர் கெட்டிமுத்து, முதன்மை செயல் அதிகாரி கௌதம், அறங்காவலர்கள் கணேசன், கவியரசு ஆகியோருடன் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் தங்கவேல், இளங்கோ, நந்தகுமார், யுவராஜ் கருப்பணன், பிரகதீஷ்வரன், மோகனசுந்தரம், முத்துக்கண்ணு, பியூலா வயலட் தங்கம் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மாணவர்களின் கலை ஆற்றலைப் பாராட்டி, ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் கல்வி மற்றும் கலை செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story