ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு
X
விசேஷ தினங்களின் காரணமாக காய்கறி விலை உயர்வு, மக்கள் கடும் அதிர்ச்சி

காய்கறி வரத்து அதிகரிப்பு விலை உயர்வு

ஈரோடு வ.உ.சி. மற்றும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று காய்கறி வரத்து அதிகரித்த நிலையில், விலைகளிலும் சிறிய அளவில் உயர்வு காணப்பட்டது. மார்க்கெட்டில் காய்கறிகள் பின்வரும் விலையில் விற்பனை செய்யப்பட்டன (கிலோ-ரூபாயில்): வெண்டை - 40, கொத்தவரை - 35, பீர்க்கன் - 45, புடலங்காய் - 50, சுரைக்காய் - 10, முருங்கை - 30, பீன்ஸ் - 60, கேரட் - 55, பீட்ரூட் - 55, முள்ளங்கி - 45, மிளகாய் - 25, பச்சை பட்டாணி - 100, உருளை - 30, கருணைக்கிழங்கு - 80, கோவக்காய் - 40, சவ்சவ் - 25, இஞ்சி - 60, பூசணிக்காய் - 20, காலிபிளவர் - 20, தக்காளி - 15, சின்ன வெங்காயம் - 30, பெரிய வெங்காயம் - 30.

வியாபாரிகள் கூறுகையில், காய்கறி விளைச்சல் பரவலாக அதிகரித்தாலும், கோவில்களில் நடைபெறும் விசேஷ நிகழ்வுகள் மற்றும் முகூர்த்த நாட்கள் காரணமாக தேவை அதிகரித்ததால், விலை சற்றே உயர்ந்துள்ளது," என தெரிவித்தனர்.

Tags

Next Story