பள்ளி விழாவுக்கு வந்த டான்ஸ் மாஸ்டர் திடீர் மரணம், நடன மேடையில் அதிர்ச்சி

பள்ளி விழாவுக்கு வந்த டான்ஸ் மாஸ்டர் திடீர் மரணம், நடன மேடையில் அதிர்ச்சி
X
முனியப்பன்பாளையத்தில் நடன பயிற்சிக்கிடையே நெஞ்சுவலி, 35 வயது டான்ஸ் மாஸ்டர் உயிரிழப்பு

அந்தியூரில் 35 வயது டான்ஸ் மாஸ்டர் திடீர் மரணம்

கோவை, கீரநத்தம், விநாயகர் வீதியை சேர்ந்த 35 வயது டான்ஸ் மாஸ்டர் நரேந்திரன், அந்தியூர் அருகே முனியப்பன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆண்டு விழாவிற்காக மாணவர்களுக்கு நடன பயிற்சி அளிக்க வந்திருந்தார். நேற்று காலை, வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், திடீரென நெஞ்சுவலியை உணர்ந்ததாக கூறி, மருந்து வாங்கிச் வர சென்றார். பள்ளியில் இருந்து வெளியே வந்து பைக்கில் ஏறியநேரம், மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story