இந்து மயானத்தில் கிறிஸ்தவ கல்லறை

இந்து மயானத்தில் கிறிஸ்தவ கல்லறை
X
ஜம்பை சுடுகாட்டில், இந்து மயானத்தில் கிறிஸ்தவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்வதால் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்

ஜம்பை சுடுகாட்டில் கிறிஸ்தவர்களுக்கு இடம் ஒதுக்கீடு – மக்கள் அதிர்ச்சி

பவானி அருகே உள்ள ஜம்பை டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சின்னியம்பாளையம் பகுதியில், சுற்றுவட்டார மக்கள் பரம்பரையாக சுடுகாட்டாக பயன்படுத்தி வந்த ஒரு காலியிடம் உள்ளது. வருவாய்துறை பதிவுகளிலும் இது மயானமாகவே குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கிறிஸ்தவ அமைப்பினர் அளித்த மனுவின் அடிப்படையில், உரிய விசாரணை இன்றி, அந்த இடத்தை கிறிஸ்தவ கல்லறை தோட்டமாக மாற்றலாம் என வருவாய் துறையினர் அறிவித்ததாக தகவல் வெளியாகியது. இது கிராம மக்களிடையே அதிர்ச்சியும் அதேசமயம் எதிர்ப்பும் எழுப்பியது.

இதன் எதிர்ப்பாக, நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று பவானி தாலுகா அலுவலகத்தில் திரண்டனர். தாசில்தார் சித்ரா மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, “பல்வேறு சமூகவாசிகள் பயன்படுத்தும் மயானத்தை தனிப்பட்ட கல்லறை தோட்டமாக மாற்றுவது தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தும். ஜம்பை பேரூராட்சியில் அரசுக்குச் சொந்தமான வேறு நிலம் உள்ளது, அதில் இடம் ஒதுக்குவது நியாயமானது,” என்று கூறினார்.

இதுகுறித்து டவுன் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்று மக்கள் அமைதியாக கலைந்தனர்.

Tags

Next Story