ஈரோடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றி கொண்டாட்டம்

ஈரோடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றி கொண்டாட்டம்
X

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய விவசாய சங்கத்தினர்.

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரோடு பேருந்து நிலையத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரோடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பெரியசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பொன்னையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பொன்னுசாமி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் மாலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணி, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் சுப்ரமணியன், மக்கள் சிவில் உரிமைக் கழக மாநிலத் தலைவர் கண.குறிஞ்சி, நீரோடை அமைப்பின் நிர்வாகி நிலவன், திராவிட ர் விடுதலைக் கழக நிர்வாகி ரத்தினசாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி நாச்சிமுத்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகி மணிராஜ், லோகுசாமி, மகேஷ், கல்யாணசுந்தரம், மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!