ஈரோடு காவல்துறை சார்பில் நாளை வாகன பொது ஏலம்

ஈரோடு காவல்துறை சார்பில் நாளை வாகன பொது ஏலம்
X

கோப்பு படம் 

ஈரோடு காவல்துறை சார்பில் வாகன பொது ஏலம் நாளை நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 15 நான்கு சக்கர வாகனம், மற்றும் 66 இரண்டு சக்கர வாகனங்கள், மொத்தம் 81, வாகனங்கள் ஈரோடு மாவட்ட ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நாளை (06-03-2022 தேதி) காலை 10 மணிக்கு பொது ஏலம் நடைபெற உள்ளது.

மேலும் வாகனங்களை 5-3 -2022 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம் வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ. 2000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ. 5000, 06-03-2022 தேதி காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பொது ஏலம் நடக்கும் இடத்தில் முன்பணம் செலுத்த வேண்டும். முன் பணத்தொகை செலுத்துபவர் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத் தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) முழுவதையும் தமிழர் வாழ்வில் ஏலம் விடும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, ஈரோடு மாவட்டம் அலுவலகத்தினை நேரடியாகவோ, ( 9080550050,9942402732 ) என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்