வன விலங்குகளின் தாகம் தீர்ந்தது

வன விலங்குகளுக்கான குடிநீர் வசதி வனத்துறையின் செயல்பாடு
பு.புளியம்பட்டி: பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட காப்புக்காடுகளில் யானை, புள்ளி மான், சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்கின்றன. கோடையின் வெப்பம் அதிகரிப்பதால், வனப்பகுதிகளில் வறட்சி நிலவி, விலங்குகள் குடிநீர் இல்லாமல் தவிக்கின்றன.
இதை கருத்தில் கொண்டு, வனத்துறையினர் விலங்குகளுக்கான குடிநீர் வசதியை உருவாக்கி வருகின்றனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று, வனப்பகுதியில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் நிரப்பும் பணி தீவிரமாக செய்யப்படுகிறது. குறிப்பாக, கொத்தமங்கலம், புதுபீர்க்கடவு, வரட்டுக்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து பவானிசாகர் வனச்சரக ரேஞ்சர் சதாம் உசேன் கூறும்போது, "மழை பெய்யும் வரை வாரத்திற்கு இரண்டு முறை லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி தொடரும்," என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu