அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கடைகள் மறையும் அபாயம்

அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கடைகள் மறையும்  அபாயம்
X
வணிகர்களுக்கு அதிகரிக்கும் சவால்கள், எச்சரிக்கை விடுத்துள்ளர் வணிகர் சங்க தலைவர்

10 லட்சம் கடைகள் மூடலா வணிகர் சங்க கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில், கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் பவானிசாகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வட்டார தலைவர் நாகமையன் தலைமை வகிக்க, செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கொடியேற்றி வைத்து உரையாற்றினார். அவர் கூறுகையில், "மே 5ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும் வணிகர் சங்க மாநாட்டில் பல லட்சம் வணிகர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலினும், மத்திய அமைச்சர்களும் கலந்துகொள்வார்கள். ஆனால், ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்களால், அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கடைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என கவலை வெளியிட்டார்.

மேலும், பவானிசாகரில் பொதுப்பணித்துறை இடத்தில் கடைகளை நடத்தும் வணிகர்களுக்கு ஆண்டுதோறும் விதிக்கப்படும் 10% வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் வணிகர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் கோவை மண்டல தலைவர் சந்திரசேகரன், மாநில துணை தலைவர் திருமூர்த்தி, மாவட்ட தலைவர் சண்முகவேல் உள்ளிட்ட பல்வேறு வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு, சிறப்பு உரையாற்றினர்.

Tags

Next Story