மணிமலை வனப்பகுதியில் பட்டா வழங்க தடை கோரிய கிராம மக்கள்

மணிமலை பகுதியில் பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு
சென்னிமலை அருகேயுள்ள முருங்கத்தொழுவு மற்றும் கொமராபாளையம் கிராம மக்கள், மணிமலை கருப்பண்ண சுவாமி கோவில் நிர்வாகி பழனிசாமி தலைமையில் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு சமர்ப்பித்துள்ளனர். அம்மனுவில், மணிமலையில் உள்ள கருப்பண்ண சுவாமி கோவில் மிகவும் பழமையானது என்றும், அப்பகுதியில் உள்ள 160 ஏக்கர் வனப்பகுதியில் வனத்துறையினர் மரங்களை நட்டு பாதுகாத்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சில அரசியல் கட்சியினர், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து மணிமலை பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்காக மரங்களை அழித்து மனைகளை விற்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இப்பகுதியில் வீட்டுமனை பட்டா பெற்று மக்கள் குடியேறினால் வன உயிரினங்கள் அழிவதுடன் வனப்பகுதியும் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ள மக்கள், மணிமலைப் பகுதியில் பட்டா வழங்குவதற்கும், வீட்டுமனை அமைப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu