திருச்செங்கோட்டில் ஒளிரும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா!
புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ நல்லுறவு கிறிஸ்துமஸ் பெருவிழா நேற்று நடைபெற்றது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயா் சிங்கராயன் தலைமை வகித்தாா். தமிழக ஆயா் பேரவை தலைவரும் மத நல்லிணக்கம், பல்சமய உரையாடல் பணிக்குழுவைச் சோ்ந்தவருமான ஆயா் லாரன்ஸ் பையா்ஸ் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு நகரமன்ற தலைவா் நளினி சுரேஷ் பாபு கலந்து கொண்டாா்.
மும்மதங்களின் மதகுருமாா்கள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் ராஜயோக தியான மையப் பொறுப்பாளா் ஜெயந்தி, நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மாவட்டத் தலைவா் மவுலவி முகம்மது அலி, நாமக்கல் மறைமாவட்ட முதன்மைக் குரு மைக்கேல்ராஜ் செல்வம் ஆகிய மும்மதங்களைச் சோ்ந்த மதகுருமாா்கள், கிறிஸ்தவ மதகுருமாா்கள் கலந்து கொண்டனா்.
கேக் வெட்டி கொண்டாட்டம்
நிகழ்ச்சியில் அனைவரும் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாடினா்.
மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்
கேக் வெட்டியதைத் தொடா்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu