பெரிய மாரியம்மன் கோவில் தீர்த்தக்குட ஊர்வலம்

பெரிய மாரியம்மன் கோவில் தீர்த்தக்குட ஊர்வலம்
X
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில், தீர்த்தக்குட ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தின் சார்பில், தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த ஊர்வலம் கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஆரம்பமாகி, ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ். வீதி, ப.செ. பார்க் வழியாக சென்று பெரிய மாரியம்மன் கோவிலை அடைந்தது. பக்தர்கள், புனித நீரை வேப்பிலையுடன் கொண்டு வந்து, கம்பம் மற்றும் அம்மன் அபிஷேகத்திற்காக வழங்கினர். நிகழ்வில் நில மீட்பு இயக்கத் தலைவர் சந்திரசேகர் தலைமையேற்றார், துணை தலைவர் கைலாசபதி, பொருளாளர் ராஜ் கண்ணன், மற்றும் பொது செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தனர்.

பெரிய மாரியம்மன் கோவில் அருகே உள்ள 12.66 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டு, அங்கு ஹிந்து பக்தர்களின் ஆர்வத்திற்கிணங்க கோவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், 80 அடி சாலை திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் ஊர்வலத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், மொடக்குறிச்சி பா.ஜ. எம்.எல்.ஏ. சரஸ்வதி, ஆண், பெண் பக்தர்கள், சிறுவர்கள், நில மீட்பு இயக்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture