வேளாண் விவசாயிகளுக்கு அரசு புதிய திட்டம் அறிவிப்பு

வேளாண் விவசாயிகளுக்கு அரசு புதிய திட்டம் அறிவிப்பு
X
வேளாண் அடுக்ககம் திட்டத்தில், விவசாயிகள் அவசியம் பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது

வேளாண் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு – அரசு அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலை வட்டார விவசாயிகளுக்காக, வேளாண் உதவி இயக்குனர் சாமுவேல் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக அரசின் பல்துறை ஒருங்கிணைந்த திட்டங்களில் இருந்து விவசாயிகள் அதிகளவில் பயன்பெற வேளாண் அடுக்ககம் (Agriculture Stack) திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், அருகிலுள்ள இ-சேவை மையம், வட்டார வேளாண் அலுவலகம் அல்லது தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம். பதிவு செய்ய, ஆதார் எண், அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், மற்றும் நில உரிமை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த திட்டம் மூலம் அரசு வழங்கும் பல்வேறு பயன்களை விவசாயிகள் எளிதில் பெறலாம் என்பதால், தகுதியுள்ள அனைவரும் விரைந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags

Next Story