பண்ணாரி அம்மன் உற்சவர் திருவீதி உலா

பண்ணாரி அம்மன் உற்சவர் திருவீதி உலா
X
பவானிசாகர் பகுதியில், பண்ணாரி அம்மன் உற்சவர் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது

பவானிசாகர் பகுதியில் பண்ணாரி அம்மன் உற்சவர் திருவீதி உலா

பவானிசாகர்: சத்தியமங்கலம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலின் ஆண்டு தோறும் நடைபெறும் குண்டம் விழா அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு, பண்ணாரி அம்மன் உற்சவர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் திருவீதி உலாவாக எழுந்தருளினார்.

தொட்டம்பாளையம் பகுதியில், மலைவாழ் மக்களின் பாரம்பரிய பீனாட்சி வாத்தியங்கள் முழங்க, பக்தி நிறைந்த சூழலில் உற்சவர் உலா நடைபெற்றது. அம்மனை வழிபட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள், சப்பரம் செல்லும் வழியில் நீண்ட வரிசையாக படுத்து பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்காக தீர்த்தம் தெளிக்கப்பட்டு, இறை அருள் பெற்றனர். உலா சென்ற வழியெங்கும் பக்தர்கள் உற்சாகமாக காத்திருந்து அம்மனைத் தரிசித்து வாழ்த்தினர்.

Tags

Next Story