ஈரோடு: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் - மாநில தலைவர் பி. துளசிமணி தலைமை
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் பி. துளசிமணி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சங்க செயலாளர் எஸ். பரணிதரன் செயல் விளக்க உரையாற்றினார். பொருளாளர் இராம. அருணாச்சலம் நிதிநிலை அறிக்கை வாசித்தார். சங்க ஆலோசகர் கே. எஸ். ஜெகதீசன், கே. பி. சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் தாலுகா செயலாளர் டி. பி. சந்திரசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
முக்கிய தீர்மானங்கள்
இந்த கூட்டத்தில், நெல் கொள்முதலுக்கான செஸ் கட்டணத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும்; 25 கிலோவிற்குள் இருக்கும் அரிசிக்கு ஜிஎஸ்டி வரி ஐந்து சதவீதம் விதிக்கப்படுவதை நீக்க வேண்டும்; அரிசி ஆலை தொழிலுக்கு தேவைப்படும் மில் டிரைவர், ஆப்ரேட்டர், கலர் ஷர்ட் ஆப்ரேட்டர் போன்றவர்களுக்கு ஐடிஐ, பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகளில் பாடத்திட்டங்களை இடம்பெறச் செய்து பயிற்சி பெற்ற நபர்களை அரசு உருவாக்க வேண்டும்;
சூரிய மின் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்; மின்சார பீக் ஹவர் கட்டணம் நீக்கப்பட்டதற்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஓ. கே. கார்த்திக் நன்றியுரையாற்றினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu