சொத்து வரியை ஈரோடு மாநகராட்சி அதிகரித்துள்ளதாக ஈரோடு வரி செலுத்துநர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் போராட்டம்

சொத்து வரியை ஈரோடு மாநகராட்சி அதிகரித்துள்ளதாக ஈரோடு வரி செலுத்துநர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் போராட்டம்
X
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடத்திற்கான சொத்து வரியை ஈரோடு மாநகராட்சி அதிகரித்துள்ளதாக ஈரோடு வரி செலுத்துநர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஈரோடு : ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடத்திற்கான சொத்து வரியை ஈரோடு மாநகராட்சி அதிகரித்துள்ளதாக ஈரோடு வரி செலுத்துநர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஈரோடு மாநகராட்சி அதிகரித்துள்ள சொத்து வரியை குறைக்க வலியுறுத்தி சொத்துப் பத்திரங்கள் மற்றும் தங்கள் கட்டிடத்திற்கான சாவியை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

15 நாட்களில் நடவடிக்கை எடுக்க உறுதி

அப்போது 15 நாட்களில் ஈரோடு மாநகராட்சி உயர்த்தப்பட்ட சொத்து வரி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சொத்து வரியை உயர்த்திய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் வரி செலுத்துநர் சங்கத்தினர் ஈரோடு மாநகராட்சி வருடம்தோறும் 6 சதவீதம் வரி உயர்வை கைவிட வேண்டும், சொத்து வரி செலுத்த காலதாமதத்திற்கு மாதந்தோறும் 12 சதவீதம் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், 24 மணி நேரங்கள் 7 நாட்கள் கெடுஜப்தி நடவடிக்கையை கைவிட வேண்டும், வரி உயர்வு, புதிய வரி விதிக்கும் போதும் பொதுமக்களிடம் முறையாக கருத்துக் கேட்டு கூட்டங்களை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Tags

Next Story