கிறிஸ்துமஸ் சிறப்பு: ஈரோடு வழியாக சிறப்பு ரயில் சேவை !

கிறிஸ்துமஸ் சிறப்பு: ஈரோடு வழியாக சிறப்பு ரயில் சேவை !
X
கிறிஸ்துமஸ் சிறப்பு: ஈரோடு வழியாக சிறப்பு ரயில் சேவை !

தெற்கு ரயில்வே கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஹூப்ளி முதல் கன்னியாகுமரி வரையிலும், பெங்களூரு முதல் கொச்சுவேலி வரையிலும் சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

திங்கள்கிழமை தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையின்படி:

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07367) செவ்வாய்க்கிழமை காலை 5:30 மணிக்கு சேலத்தை வந்தடையும். பின்னர் நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக பிற்பகல் 3:20 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும். இந்த ரயிலில் 8 ஏசி பெட்டிகள், 5 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் இருந்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) மாலை 3:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06557) மறுநாள் காலை 10:05 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும். திரும்பும் பயணத்தில், புதன்கிழமை (டிசம்பர் 25) மதியம் 12:35 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு பெங்களூரை வந்தடையும். இந்த ரயிலில் 3 ஏசி பெட்டிகள், 3 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 9 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், செங்கனூர், கொல்லம் வழியாக இயக்கப்படும்.

கூடுதல் நிறுத்தம்: கேரள மாநிலம் பேகல் கடற்கரையில் நடைபெறவுள்ள சர்வதேச கடற்கரைத் திருவிழாவை முன்னிட்டு, தாம்பரம்-மங்களூர் விரைவு ரயில் (எண் 16159) மற்றும் கன்னியாகுமரி-மங்களூர் விரைவு ரயில் (எண் 16650) ஆகியவை டிசம்பர் 31 வரை பேகல் கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

Tags

Next Story