சிப்காட்டில் 15 மாதங்களாக காத்திருக்கும் சுத்திகரிப்பு நிலையம்

சிப்காட்டில் 15 மாதங்களாக காத்திருக்கும் சுத்திகரிப்பு நிலையம்
X
சிப்காட்டில் தாமதமான சுத்திகரிப்பு நிலையம் விரைவில் தொடங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் மனு

சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் 15 மாதங்களாகியும் துவங்கவில்லை'

பெருந்துறை: பெருந்துறை சிப்காட்டில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரைவுபடுத்தி பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி தலைமையில் மனு அனுப்பினர்.

அதில் கூறியிருப்பதாவது: பெருந்துறை சிப்காட்டில் இருந்து நல்லா ஓடையில் வெளியேறும் மாசடைந்த கசிவு, கழிவு நீரையும், மாசடைந்த நிலத்தடி நீரையும் சுத்திகரித்து தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. சிப்காட் தொழிற்சாலைகள் இணைந்து சிப்காட்டில் 40 கோடி ரூபாய் மதிப்பில், தினமும் 20 லட்சம் லிட்டர் திறன் கொண்ட பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அறிவித்தனர். கடந்த 2023 நவம்பர் 12-ல் அறிவித்து, 6 முதல் 7 மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என கூறினர்.

சிப்காட் நிர்வாகத்தின் மெத்தன போக்கால், 15 மாதங்களைக் கடந்தும் பணி ஆணையே வழங்கவில்லை. டெண்டர் கூட இறுதி செய்யப்படவில்லை. இச்செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி, விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். இதற்கான நடவடிக்கையை முதல்வர் விரைவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story