நிழற்கூடம் இல்லாததால் பொதுமக்கள், வெயிலில் அவதி

பவானி மூன்ரோட்டில் நிழற்கூடம் தேவை – பயணிகள் அவதி
பவானி-மேட்டூர் சாலையில் அமைந்துள்ள மூன்ரோடு முக்கிய சாலை சந்திப்பாக உள்ளது. ஒருபுறம் மைலம்பாடி, ஒலகடம், வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலையும், மறுபுறம் மேட்டூர், மேச்சேரி, தொப்பூர் செல்லும் சாலையும் இணைந்து, பவானி மற்றும் ஈரோடு நோக்கி தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இவ்வளவு முக்கியமான இடமாக இருந்தும், இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதியான நிழற்கூடம் இல்லை. வெயில் காலங்களில் பயணிகள் கடும் சூடில் சிரமப்பட வேண்டிய சூழல் உருவாகி, மழைக் காலத்தில் அடைக்கலம் தேடி அங்குமிங்கும் ஓட வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பலமுறை மனுக்கள் பெற்றிருந்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய குற்றச்சாட்டு. பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதியில், எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கருப்பணன் தலையிட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu