தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது
X
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த அரசூர் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த அரசூர் பகுதியில் தடை செய்யப் பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், எஸ். ஐ. கருப்பு சாமி தலைமையிலான போலீசார் அரசூர் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

சண்முக நாதன் கைது

அப்போது தூத்துக்குடியைச் சேர்ந்த சண்முக நாதன்(40) என்பவர் நடத்தி வந்த கடையில் ஹான்ஸ், கூல் லிப், விமல், மற்றும் வி1 போன்ற தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகநாதனை கைது செய்தனர்.


250 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

கடையில் இருந்து சுமார் 250 கிலோ அளவுள்ள போதை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தப் பொருட்கள் பல இளைஞர்களுக்கு விற்பனை செய்ய கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags

Next Story
why is ai important to the future