சிறுமிக்கு பாலியல் தொல்லை: கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
X

கூலித்தொழிலாளி ராஜ மாணிக்கம்.

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5000 அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தியூர் பி.கே.புதுார் கண்ணம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கூளையன் (எ) ராஜ மாணிக்கம், 23. கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை காட்டி 2020 மே 17 ல் கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் கடத்தல், குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ராஜமாணிக்கத்தை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை இன்று விசாரித்த நீதிபதி மாலதி, போக்சோ பிரிவின்படி ராஜ மாணிக்கத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.ஐந்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சத்தை நிவாரண தொகையாக ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!