/* */

நாளை கடை திறந்தால் கடும் நடவடிக்கை : மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

அனுமதி மறுக்கப்பட்ட பகுதிகளில் கடைகளை திறந்தால் சீல் வைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

HIGHLIGHTS

நாளை கடை திறந்தால் கடும் நடவடிக்கை : மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
X

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார். அதன்படி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சலில் மட்டுமே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டீ கடைகளும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் வருகைக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்

இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் 23ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை மற்றும் நாளை மறுநாள் ( சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) அனுமதி மறுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மற்ற கடைகள் திறந்து இருந்தால் சீல் வைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகிறது. புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ள கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் பிற கடைகள் திறக்கப் பட்டிருந்தால் அந்தக் கடைகள் பூட்டி சீல் வைத்து ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழி முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 13 Aug 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...