ஈரோட்டில் நவ.18, 19ம் தேதி போலீசார் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

ஈரோட்டில் நவ.18, 19ம் தேதி  போலீசார் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
X

ஈரோடு மாவட்ட காவல் நிலையம் பைல் படம்

ஈரோட்டில் நவ. 18 மற்றுமு் 19ம் தேதிகளில் மது விலக்கு பிரிவு போலீசார் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் ஏலம் நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் படி, பறிமுதல் செய்யப்பட்டுள்ள 78 நான்கு சக்கர வாகனம் மற்றும் 217 இரண்டு சக்கர வாகனங்கள், மொத்தம் 295 வாகனங்கள் நவ. 18, 2021 மற்றும் நவ. 19, 2021, ஆகிய இரு நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை, ஈரோடு மாவட்டம், 46, புதூர், ஆயுதப்படை மைதான வளாகத்தில் பொது ஏலம் நடைபெறவுள்ளது.

நவ. 17, 2021 காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நேரில் வாகனங்களை பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் இரு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 10,000 ரூபாயும், நவ. 18, 2021, காலை 07:00 மணி முதல் 10:00 மணிக்குள் பொது ஏலம் நடத்தும் இடத்தில், முன் பணம் செலுத்த வேண்டும்.

முன் பணத்தொகை செலுத்துபவர் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, ஈரோடு மாவட்டம், அவர்களின் அலுவலகத்தினை நேரடியாகவோ, தொலைபேசி எண் : 9442265651, 9942402732, 9498174811, ௯௯௭௬௦௫௭௧௧௮ மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
ai and future cities