மகா சிவராத்திரியையொட்டி சம்பங்கி பூ விலை உயர்வு!

மகா சிவராத்திரியையொட்டி சம்பங்கி பூ விலை உயர்வு!
X
சிவராத்திரி பண்டிகை தினம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் சம்பங்கி பூ விலை ஒரு கிலோ ரூ.220க்கு விற்பனையானது.

ஈரோடு : சிவராத்திரி பண்டிகை தினம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் சம்பங்கி பூ விலை ஒரு கிலோ ரூ.220க்கு விற்பனையானது.

சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரியகுளம், வரதம்பாளையம், புளியங்கோம்பை, சிக்கரசம்பாளையம், ராமபைலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது.

இங்கு விளையும் சம்பங்கி பூக்கள் அதிகாலையில் பறிக்கப்பட்டு கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பண்டிகை நாட்களில் தேவை அதிகரிப்பு

பண்டிகை நாட்கள் மற்றும் விழா காலங்களில் சம்பங்கி பூக்களின் தேவை அதிகரிப்பதால் அவ்வப்போது பூக்களின் விளையும் அதிகரித்து விற்பனையாவது வழக்கம். அதன்படி இன்று புதன்கிழமை சிவராத்திரி பண்டிகை தினம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்தது.

விலை உயர்வு

இதன் காரணமாக சத்தியமங்கலத்தில் நேற்று முன்தினம் சம்பங்கி ஒரு கிலோ ரூ.140க்கு விற்பனையான நிலையில் நேற்று ரூ.80 விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.220க்கு விற்பனையானது. சம்பங்கி பூக்கள் விலை உயர்ந்து விற்பனையானதால் பூக்களை விற்பனைக்கு கொண்டு சென்ற விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
சேலம் மாநகராட்சியில் ரூ. 1.26 கோடி பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல்