ஈரோடு: தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.4,42,000 பறிமுதல்

ஈரோடு: தேர்தல் பறக்கும் படையினரால்  ரூ.4,42,000 பறிமுதல்
X

கைப்பற்றப்பட்ட பணத்துடன் தேர்தல் அலுவலராக உள்ள மாநகராட்சி கமிஷனர் சிவகுமார். 

ஈரோட்டில் உரிய ஆவணங்களிலின்றி எடுத்து வரப்பட்ட ரூ.442000 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஈரோடு சேனாதிபதிபாளையம் பிரிவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், வெள்ளோடு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவரிடம் இருந்து 4,42000 ரூபாய்,tn33 bw0099 கைப்பற்றி தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

முதற்கட்ட தகவலில் நந்தகுமார் குடிநீர் விநியோக ஒப்பந்ததாரர் ஆக உள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றிய பணத்தை உரிய ஆவணங்களை சமர்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல் அலுவலராக உள்ள மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் அறிவுறுத்தினார்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!