கோவிலுக்கு சொந்தமான இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் மீட்பு

கோவிலுக்கு சொந்தமான இரண்டே முக்கால் ஏக்கர் நிலம்  மீட்பு
X

கோவிலுக்கு சொந்தமான இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் மீட்பு.

வெள்ளோட்டில் ஆதிநாராயன பொருமாள் கோவிலுக்கு சொந்தமான இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் இந்துசமய அறநிலைத்துறையினால் மீட்பு.

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் ஆதிநாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 12 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் 75 சென்ட் நிலத்தை கடந்த நூறு ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கையகப்படுத்தி வீடு மற்றும் கட்டிடங்களை கட்டி வைத்திருந்தார் . கோவிலுக்கு எந்த விதமான குத்தகையும் செலுத்துவது இல்லை. தன் வசம் உள்ள நிலம் என்பதால் நானே உரிமையாளர் என கூறி வந்துள்ளார்

மேற்படி நபரிடமிருந்து நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பலமுறை முயன்றும் முடியவில்லை. கடைசியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தமிழக அரசின் நடவடிக்கையால் நீதிமன்ற தீர்ப்பு படி இன்று மீட்டனர்.

இணை ஆணையர் அன்னகொடி தலைமையில் பொக்லைன் இயந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர். நிலத்தை மீட்க சென்ற போது நீதிமன்ற தீர்ப்பை காட்டிய பின்பும் ஆக்கிரமிப்பாளர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். அறநிலைய துறை அதிகாரிகளுக்கு உறுதுணையாக வடமுகம் வெள்ளோடு ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி ஜெகநாதன், குட்டப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவி ரேணுகா குமார் முன்னால் கவுன்சிலர் சுப்புரத்தினம், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் (சேர்மேன் ) காயத்ரி இளங்கோ, தி மு க ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் ஆகியோர் செயல்பட்டனர்.ஆக்கிரமிப்பு மீட்பு காரணமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture