ஈரோடு, சென்னிமலை யூனியனை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

இறுதிச்சடங்கு செய்ய இடமில்லாததால் மாற்று இடம் கோரி பொதுமக்கள் மனு
ஈரோடு மாவட்டம், சென்னிமலை யூனியனை சேர்ந்த முருங்கந்தொழுவு ஆதிதிராவிடர் காலனி மக்கள், இறுதிச்சடங்கு செய்வதற்கான இடமில்லாமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதனால், அவர்கள் கடந்த ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ. சாந்தகுமாரிடம் முறையிட்டு மனு வழங்கினர்.
மனுவில் அவர்கள் தெரிவித்ததாவது: "எங்கள் முருங்கந்தொழுவு ஆதிதிராவிடர் காலனியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்தம் 200க்கும் அதிகமான மக்கள் இங்கு குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்களை பளையபாளையம் பகுதியிலிருந்து தலவுமலை செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் அடக்கம் செய்து வந்தோம். ஆனால் தற்போது அந்த இடத்துக்கு அருகிலுள்ள பட்டா நில உரிமையாளர்கள், அங்கு செல்ல முடியாத வகையில் தடுப்பு சுவர் அமைத்து விட்டனர். இதனால் இனி எங்கள் குடும்ப உறவினர்களின் இறுதிச்சடங்குகளை நடத்த இடமே இல்லாமல் தவிக்கிறோம். இதற்கு உடனடி நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி வழங்க வேண்டும்" என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த மனுவை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆதிதிராவிடர் காலனி மக்களின் கோரிக்கைக்கு அரசு உடனடி தீர்வு வழங்குமா என்பது தெரிய வரவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu