பவானி ஆறு அழியும் நிலை ஏற்படுமா

பவானி ஆறு அழியும் நிலை ஏற்படுமா
X
பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் கண்டனம் தெரிவித்த பொதுமக்கள்

பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பு பொதுமக்கள் கண்டனம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் சாய மற்றும் காகித ஆலைகளின் ரசாயன கழிவுநீர் பவானி ஆற்றில் கலந்ததால், ஆற்று நீர் கடுமையாக மாசடைந்து நிறம் மாறி, துர்நாற்றம் வீசுகிறது. இதனை தடுக்கும் வகையில், பவானி நதி பாதுகாப்பு கூட்டியக்கம் மற்றும் அனைத்து கட்சிகள் இணைந்து, பவானிசாகர் பஸ் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பவானிசாகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம் தலைமை வகித்தார். இதில் சத்தி, பவானிசாகர், புன்செய் புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, அமமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினரும் கலந்துகொண்டு, ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த போராட்டம், பவானி ஆற்றின் மாசுபாடு குறித்து மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதை காட்டுகிறது.

Tags

Next Story