கோபி அருகே ஸ்பின்னிங் மில்லில் திருடிய 3 பேரை விரட்டிபிடித்த பொதுமக்கள்..!
சம்பவம் நடந்த இடம்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொளப்பலூர் யூனிட் நகரில் தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. இந்த மில் கடந்த 4 ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ளது.
காவலாளி சந்தேகத்தால் சிக்கினர்
இந்த மில்லில் காவலாளி ஜெயராமன் (55) என்பவர் இரவு நேர பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று (ஜனவரி 2) நள்ளிரவில் மில்லின் பின்புறம் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த 4 பேர் மில் வளாகத்தில் இருந்த மின்சாதன பொருட்கள், பழைய இரும்பு பொருட்களை திருடிக் கொண்டிருந்தனர்.
காவலாளி விரட்டியடித்தபோது...
சத்தம் கேட்டு மில் காவலாளி ஜெயராமன் மில்லின் பின்புறம் சென்று பார்த்தபோது 4 பேர் கொண்ட கும்பல் பொருட்களை திருடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து ஜெயராமன் சத்தமிட்டவாறே திருடர்களை பிடிக்க முயன்ற போது 4 பேரும் தப்பி ஓடினர்.
அருகில் இருந்தவர்கள் உதவி
அதற்குள் ஜெயராமனின் சத்தம் கேட்ட அருகில் உள்ளவர்கள், மில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பிய திருடர்களில் மூன்று பேரை விரட்டி பிடித்து சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்
இதைத்தொடர்ந்து பிடிப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 3 பேரும் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் வெங்கமேட்டை சேர்ந்த கவிராஜ் (27), மனோஜ் (19) மற்றும் அதேப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu