மளிகை கடைக்காரருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்த உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி

மளிகை கடைக்காரருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்த உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி
X
மளிகை கடையில் 1.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததால் கடை உரிமையாளருக்கு உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

ஈரோடு : மளிகை கடையில் 1.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததால் கடை உரிமையாளருக்கு உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி எல்லையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஈரோடு உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி தான் பியா பானு, சத்தியமங்கலம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரோக்கிய பசாமி மற்றும் சத்தியமங்கலம் போலீசார் அந்த பகுதியில் உள்ள 20 கடைகளில் சோதனை நடத்தினர்.

இதில் வடக்குப்பேட்டை பிரிட்டோ காலனியில் உள்ள ஒரு மளிகை கடையில் 1.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடை உரிமையாளருக்கு உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

Tags

Next Story
ai in future agriculture