ஈரோடு சந்தையில் காய்கறி விலை குறைவு

வரத்து அதிகரிப்பால் ஈரோடு காய்கறி சந்தையில் விலை குறைவு
ஈரோடு நேதாஜி காய்கறி தினசரி மார்க்கெட்டில் நேற்று காய்கறிகளின் வரத்து அதிகரித்ததால் பெரும்பாலான காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளன. சந்தையில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை விவரங்கள் கீழ்வருமாறு அமைந்துள்ளன.
கத்தரிக்காய் கிலோ 30 ரூபாய், வெண்டைக்காய் 35 ரூபாய், பீர்க்கன்காய் 40 ரூபாய், புடலங்காய் 40 ரூபாய், பச்சை மிளகாய் 30 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகியுள்ளன. முருங்கைக்காய் 60 ரூபாய், முள்ளங்கி 65 ரூபாய், பட்டை அவரை 30 ரூபாய், கருப்பு அவரை 60 ரூபாய், சவ்சவ்காய் 25 ரூபாய், முட்டைக்கோஸ் 20 ரூபாய், கோவக்காய் 30 ரூபாய் ஆகிய விலைகளில் கிடைத்தன.
மேலும் பீட்ரூட் 30 ரூபாய், கேரட் 70 ரூபாய், உருளைக்கிழங்கு 30 ரூபாய், பாகற்காய் 40 ரூபாய், இஞ்சி 50 ரூபாய், சுரைக்காய் 10 ரூபாய், காலிஃப்ளவர் 20 ரூபாய், சக்கரவள்ளிக்கிழங்கு 35 ரூபாய், கருணைக்கிழங்கு 70 ரூபாய், பச்சைப் பட்டாணி 90 ரூபாய், சின்ன வெங்காயம் 25 ரூபாய், பெரிய வெங்காயம் 30 ரூபாய், பீன்ஸ் 60 ரூபாய் மற்றும் தக்காளி 15 ரூபாய் என்ற விலையில் விற்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu