பிரசவத்திற்கு பயந்து ஒளிந்த கர்ப்பிணி

பிரசவத்திற்கு பயந்த கர்ப்பிணி – மருத்துவ குழுவின் போராட்டத்தில் ஆண் குழந்தை பிறந்தது

பிரசவத்துக்கு பயந்து ஒளிந்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம்

அந்தியூர் பர்கூர் மலை கிராமம் சோளகனையைச் சேர்ந்த தொழிலாளி பொம்மிரானின் மனைவி ஜோதி (20) கர்ப்பமடைந்து பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் பரிசோதனை மேற்கொண்டு வந்தார். கடந்த 3ம் தேதியை பிரசவ தேதியாக மருத்துவர்கள் அறிவித்து அந்தியூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேருமாறு அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்ல பயந்த ஜோதி, ஐந்து நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து தலைமறைவானார். தகவலறிந்த அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான சுகாதாரக் குழுவினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தாமரைக்கரை அருகே தேவர்மலையில் உள்ள தாய் வீட்டில் ஜோதி இருப்பது கண்டறியப்பட்டது. சக்தி கிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறையினர், பர்கூர் போலீஸ், வனத்துறையினர் உதவியுடன் நேற்று முன்தினம் அவரை சந்தித்தனர். மருத்துவர்கள் அறிவுரை கூறியும் ஏற்காமல் பிடிவாதமாக ஜோதி மருத்துவமனைக்கு வர மறுத்தார். அரை மணி நேர தொடர் போராட்டத்திற்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் அவரை உள் நோயாளியாக சேர்த்தனர். நள்ளிரவில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story