குடியிருப்பு ஒதுக்கீடு குறித்து அமைச்சர் முத்துசாமியிடம் பி.பெ. அக்ரஹாரம் மக்கள் குற்றச்சாட்டுகள்

குடியிருப்பு ஒதுக்கீடு குறித்து அமைச்சரிடம் கோரிக்கை
ஈரோடு பி.பெ. அக்ரஹாரம் அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்தனர். அம்மக்கள் தங்களுக்கு ஏற்கனவே இருந்த பழைய கட்டட வீடுகளின் வரிசைப்படி (கீழ் தளம், முதல் தளம்) புதிய வீடுகளை ஒதுக்கீடு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கை குறித்து விரிவாக பேச நாளை (இன்று) முகாம் அலுவலகத்திற்கு வருமாறு அமைச்சர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். இதுகுறித்து வீட்டு வசதி துறை அலுவலர்கள் கூறுகையில், மொத்தம் 330 வீடுகள் உள்ளதாகவும், ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.61 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதில் 97 பேர் முழுத் தொகையையும் செலுத்தியுள்ளனர் என்றும், 88 பேருக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் இன்னும் அவை வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டனர். ஏற்கனவே வசித்த வீடுகளின் வரிசைப்படி கேட்பவர்களில் சிலர் முழுமையாக பணத்தை செலுத்தவில்லை என்றும், முறைப்படி பணம் செலுத்தியவர்களுக்கே வீடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். இரு தரப்பினரும் பேசி சம்மதித்தால் மட்டுமே ஏற்கனவே வசித்தவர்களுக்கு வரிசைப்படி வீடு வழங்க முடியும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu