பவானியில் 3 மாதம் மூடப்படாத குழி

பவானியில் 3 மாதம் மூடப்படாத குழி
X
பவானியில் 3 மாதம் மூடப்படாத குழி , பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளுக்கு சிரமம்

பவானி நகராட்சிக்கு உட்பட்ட 13, 14வது வார்டுகள் சந்திக்கும் பழனிபுரம் முதல் நான்காவது வீதி சந்திப்பில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அம்ரூத் திட்டத்திற்காக குடிநீர் குழாய் அமைக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் மூன்று மாதங்கள் கடந்தும் இந்தக் குழி மூடப்படாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குடிநீர் குழாய் அமைக்கும் பணி முடிந்தும் குழியை மூடாததால் சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும், குழந்தைகள் மற்றும் வாகனங்கள் கடப்பதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் அம்ரூத் திட்டத்தில் குழி தோண்டும் பணி விரைவாக நடைபெற்றாலும், குழிகளை மூடுவதில் தாமதம் ஏற்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் வரும் 24ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

Tags

Next Story